
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஊருடன் கூடி வாழ விரும்பினால், ஊராருக்கு வயிறார அன்னம் இடுவது தான் மேலான தர்மம்.
* ஏழைகளே நாட்டில் இல்லாமல் செய்வது நல்லது. வயிற்றுப் பிழைப்புக்கு வழி இல்லாமல், எவருமே இருக்கக் கூடாது.
* திறமையைப் பயன்படுத்தினால் செல்வத்தை சேர்க்கலாம். திறமையைப் பயன்படுத்துவதால் மக்கள் வலிமை பெறுகிறார்கள்.
* பெண்கள் ஆண்களிடம் அன்புடன் இருக்க வேண்டுமானால், ஆண்கள் பெண்களிடம் அசையாத பக்தி செலுத்த வேண்டும்.
* நம் நாட்டு நாகரிகம் அதிக சக்தி உடையது. இது மற்ற நாகரிகத்தை விழுங்கி ஜீரணிக்கும் திறன் கொண்டது.
* திருமணம் செய்து கொண்ட ஆணுக்குப் பெண் அடிமையில்லை. அவள் உயிர்த்துணை.
* வாழ்வில் வெற்றி பெற வேண்டுமானால் சம்பாதித்து கொள்ள வேண்டிய குணம் பொறுமை.
- பாரதியார்